ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 8 ஜூலை 2024 (10:13 IST)

கள்ளக்காதலியுடன் உல்லாசம்; கணவனின் லீலைகளை வீடியோ எடுத்த மனைவிக்கு கணவன் கொடுத்த தண்டனை!

கள்ளக்காதலியுடன் உல்லாசமாக இருந்த கணவரை மனைவி வீடியோ எடுத்ததால், கணவன் ஆத்திரத்தில் மனைவியை தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலம் பெங்களூரில் உள்ள நெலமங்களா பகுதியில் உள்ள சிக்கபிதரஹள்ளுவை சேர்ந்தவர் கரஷோத்தம். இவருக்கு கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு ஷில்பா என்ற பெண்ணுடன் திருமணம் ஆன நிலையில் 8 வயதில் மகன் ஒருவனும் உள்ளார். பெங்களூரில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் கரஷோத்தம் பணிபுரிந்து வரும் நிலையில் அதே நிறுவனத்தில் உள்ள இளம்பெண் ஒருவருடன் கரஷோத்தமுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் இது கள்ளக்காதலாக மாறிய நிலையில் இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்து வந்துள்ளனர்.

இந்த விஷயம் கரஷோத்தமின் மனைவி ஷில்பாவிற்கு தெரிய வந்த நிலையில் இருவருக்கும் இடையே அடிக்கடி சண்டை, வாக்குவாதம் எழுந்து வந்துள்ளது. சமீபமாக கரஷோத்தம் அந்த இளம்பெண்ணை தனது வீட்டிற்கே அழைத்து வந்து உல்லாசத்தில் ஈடுபட்டு வந்துள்ளார். சமீபத்தில் அவர் அவ்வாறு செய்தபோது அதை ஷில்பா வீடியோ எடுத்துள்ளார்.
 

இதை கண்டு ஆத்திரமடைந்த கரஷோத்தம் ஷில்பாவை மூர்க்கமாக தாக்கியுள்லார். இதுகுறித்து ஷில்பா காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். மேலும் அந்த இளம்பெண்ணை திருமணம் செய்து கொள்ள விரும்பிய கரஷோத்தம், அதற்காக ஷில்பாவை தற்கொலை செய்து கொள்ளும்படி தொடர்ந்து டார்ச்சர் செய்து வந்ததாகவும் ஷில்பா குற்றம் சாட்டியுள்ளார். அதன் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்துள்ள போலீஸார் கரஷோத்தமை கைது செய்துள்ளனர்.

Edit by Prasanth.K