செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 7 ஜூன் 2024 (17:57 IST)

நான் முதல்வன் திட்டத்தில் இலவச ரயில்வே, வங்கி பணித்தேர்வு பயிற்சி! – உடனே அப்ளை பண்ணுங்க!

Naan Mudhalvan
தமிழகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்த ‘நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் அரசு பணித்தேர்வுகளுக்கு தயாராகும் இளைஞர்களுக்கு 6 மாத கால இலவச பயிற்சி அளிப்பதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.



தமிழ்நாட்டில் திமுக ஆட்சி அமைத்தது முதலாக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் பயன்பெறும் வகையில் ‘நான் முதல்வன்’ திட்டம் தொடங்கப்பட்டு பல பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் SSC, ரயில்வே, வங்கி பணியிடங்களுக்கு தேர்வு எழுதும் இளைஞர்களுக்கு 6 மாத காலம் உறைவிடத்துடன் பயிற்சி அளிக்கப்பட உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இதற்காக தமிழ்நாடு முழுவதும் இருந்து 1000 பயனாளர்கள் நுழைவு தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். SSC, ரயில்வே, வங்கி பணியிடங்களுக்கான தேர்வுகளுக்கு தயாராகி வரும் இளைஞர்கள் இதன் மூலம் பலன் பெறலாம். விருப்பமுள்ளவர்கள் naanmudhalvan.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆன்லைன் விண்ணப்பங்கள் நாளை 08.06.2024 முதல் தொடங்குகிறது. விண்ணப்பங்களை சமர்பிக்க கடைசி தேதி 23.06.2024 ஆகும். ஜூலை 7ம் தேதி ஹால் டிக்கெட் வழங்கப்பட்டு ஜூலை 14 அன்று நுழைவுத் தேர்வு நடைபெற உள்ளது.

Edit by Prasanth.K