ஆப்கானிஸ்தான் - பாகிஸ்தான் போர்: பாகிஸ்தானுக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஆதரவு!
ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் இடையே "நேரடிப் போர்" மூண்டுள்ள நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பாகிஸ்தானுக்கு தனது ஆதரவை தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் தலைமையுடன் தமக்கு மிகச்சிறந்த உறவு இருப்பதாகவும், அந்நாட்டின் பிரதமர் மற்றும் ராணுவ தளபதி மீது தமக்கு மிகுந்த மரியாதை உள்ளதாகவும் அவர் புகழாரம் சூட்டியுள்ளார்.
பாகிஸ்தானின் தற்காப்பு உரிமையை அமெரிக்க வெளியுறவுத்துறை ஆதரித்துள்ள அதே வேளையில், அங்குள்ள அமெரிக்க குடிமக்களுக்குப் பாதுகாப்பு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. காபூல் மற்றும் கந்தகார் உள்ளிட்ட நகரங்களில் பாகிஸ்தான் வான்வழி தாக்குதல்களை நடத்தியுள்ள நிலையில், இரு தரப்பிலும் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன.
தாலிபான் தரப்பு பேச்சுவார்த்தைக்கு தயார் எனக் கூறினாலும், எல்லையில் பதற்றம் நீடிக்கிறது. ஐநா பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் இந்த வன்முறை குறித்து ஆழ்ந்த கவலை தெரிவித்து, உடனடியாக போரை நிறுத்திவிட்டு ராஜதந்திர ரீதியாக தீர்வுகாண அழைப்பு விடுத்துள்ளார்.
கத்தார் நாடு இந்த மோதலை தணிக்க மீண்டும் மத்தியஸ்தம் செய்ய முயன்று வருகிறது.
Edited by Siva
