வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 8 ஜூலை 2020 (08:41 IST)

இந்தியாகிட்ட சீனா சண்டை போட்டா நாங்க களமிறங்குவோம்! – அமெரிக்கா சூசக எச்சரிக்கை!

இந்தியா – சீனா இடையே போர் மூண்டால் இந்தியாவிற்கு ஆதரவாக அமெரிக்க ராணுவம் வரும் என அமெரிக்கா சூசகமாக எச்சரிக்கை விடுத்துள்ளது.

லடாக் எல்லையில் ஏற்பட்ட மோதலை தொடர்ந்து இந்தியா – சீனா இடையே நல்லுறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் சீன செயலிகள் தடை செய்யப்பட்டுள்ள நிலையில், எல்லைப்பகுதியில் இந்திய விமானப்படை பயிற்சிகளையும் மேற்கொள்ள தொடங்கியுள்ளது.

இந்நிலையில் அமெரிக்க வெள்ளை மாளிகையின் தலைமை அதிகாரி மார்க் மீடோஸ் அளித்துள்ள பேட்டி ஒன்றில் இந்தியா – சீனா விவகாரம் குறித்து பேசியுள்ளார். அதில் அவர் “ஒரு விஷயத்தை தெளிப்படுத்த விரும்புகிறோம். உலகிலேயே தாங்கள்தான் பலம் வாய்ந்த நாடுகள் என காட்டிக்கொண்டு பிற நாடுகள் மீது அத்துமீறினால் அமெரிக்கா பார்த்துக் கொண்டு இருக்காது. அது சீனாவாக இருந்தாலும், எந்த நாடாக இருந்தாலும் எங்கள் ஆதரவு நட்பு நாடுகளின் பக்கம் இருக்கும். எங்கள் ராணுவம் அவர்களுக்கு துணை நிற்கும்” என்று கூறியுள்ளார்.

மேலும் சீனாவின் தென் கடல் பகுதியில் அமெரிக்க ராணுவ கப்பல்கள் நிறுத்தப்பட்டுள்ளது அமெரிக்காவின் பலத்தை நிரூபிப்பதற்காக என்றும் அவர் கூறியுள்ளார். அவர் நட்பு நாடு என இந்தியாவைதான் கூறியுள்ளார் என்றும், போர்  மூண்டால் அமெரிக்க ராணுவம் துணைக்கு வரும் என்றும் பேசிக்கொள்ளப்படுகிறது.