வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 15 ஏப்ரல் 2020 (08:15 IST)

நிதியை நிறுத்திய ட்ரம்ப்! – சும்மா சண்டை போடாதீங்க! – ஐநா அறிவுரை

உலக சுகாதார அமைப்புக்கு அளித்து வரும் நிதியை நிறுத்துவதாக ட்ரம்ப் அறிவித்துள்ளதற்கு ஐ.நா சபை எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

உலகம் முழுவதும் பெரும் அச்சுருத்தலாக மாறியுள்ள கொரோனா அமெரிக்காவில் பெரும் உயிர்பலியை ஏற்படுத்தியுள்ளது. ட்ரம்ப் நிர்வாகம் கொரொனா தடுப்பு நடவடிக்கைகளில் தவறிவிட்டதாக அமெரிக்க எதிர்கட்சி மற்றும் மக்கள் குற்றம் சாட்ட தொடங்கியுள்ளனர். ஆனால் அதிபர் ட்ரம்ப் ‘சீனாவின் தவறான மருத்துவ தகவல்களை உலக சுகாதார அமைப்பு பின்பற்றியதே வைரஸ் உலக நாடுகள் முழுவதும் பரவ காரணம்” என பழியை உலக சுகாதார அமைப்பு மீது போட்டு பேசி வருகிறார்.

இந்நிலையில் சரியாக செயல்படாதா உலக சுகாதார அமைப்புக்கு நிதியை நிறுத்துவதாகவும் ட்ரம்ப் அறிவித்துள்ளார். இதுகுறித்து உலக சுகாதார அமைப்பு இதுவரை எந்த பதிலும் தரவில்லை. ஆனால் ட்ரம்ப்பின் இந்த முடிவு குறித்து பேசியுள்ள ஐ.நா பொதுச்செயலாளர் அந்தோணியா குத்ரோஸ் “உலக சுகாதார அமைப்பிற்கோ அல்லது கொரோனாவை எதிர்த்து போராடும் எந்த ஒரு அமைப்பிற்கோ நிதியை குறைக்க இது நேரமல்ல. தேவையற்ற சண்டைகளை தவிர்த்து அனைவரும் ஒற்றுமையாக செயல்பட வேண்டிய நேரம் இது” என்று கூறியுள்ளார்.