கொரோனா தடுப்பூசி எப்போது கண்டுபிடிக்கப் படும் ? - உலக சுகாதா நிறுவனம் தகவல்
சீனாவில் இருந்து பல்வேறு உலக நாடுகளுக்கு கொரோனா வைரஸ் பரவியுள்ளது. இந்நிலையில் உலக அளவில் இதுவரை, 19, 20,918 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்,453289 பேர் குணமடைந்துள்ளனர். சுமார் 119686 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் கொரோனா தடுப்பூசி கண்ண்டுபிடிக்க குறைந்தது ஒருவருடம் ஆகும் என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து ஜெனீவாவில் டாக்டர் மார்க்ரெட் ஹாரிஸ் செய்தியாளர்களிடம் கூறியதாவது :
கொரோனாவை தடுக்க பல நாடுகளில் தடுப்பூசி சோதனை என்பது ஆய்வகங்களில் மட்டும்தான் உள்ளது.
கொரோனா தொற்று பெரும்பாலும் அமெரிக்க மற்றும் ஐரோப்பாவில்தான் 90 % பரவியுள்ளது. அதேசமயம், இத்தாலி, ஸ்பெயின் ஆகிய நாடுகளில் தொற்று ஏற்பட்டவர்களின் எண்ணிக்கை குறைந்தாலும், பிரிட்டன் மற்றும் துருக்கி ஆகிய நாடுகளில் இது அதிவேகத்தில் உளள்து என கூறினார்.