1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Modified: புதன், 15 ஏப்ரல் 2020 (08:09 IST)

20 லட்சத்தை நெருங்கும் கொரோனா பாதிப்பு: அமெரிக்கா தொடர்ந்து முதலிடம்

20 லட்சத்தை நெருங்கும் கொரோனா பாதிப்பு:
உலகம் முழுவதும் சுமார் 200 நாடுகளில் கொரோனா வைரஸ் பாதித்து மனித இனத்திற்கே அச்சம் ஏற்படுத்தி வரும் நிலையில் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 20 லட்சத்தை நெருங்கிவிட்டதாக உலக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.
 
உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 19,97,666 ஆக அதிகரித்துள்ளதாகவும் இதில் அமெரிக்காவில் மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6 லட்சத்தை தாண்டியுள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது
 
மேலும் உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,26,597 ஆக உயர்ந்துள்ளதாகவும், அமெரிக்காவில் 23,644 பேர் பலியாகியுள்ளதாகவும், நேற்று ஒரே நாளில் 2,407 பேர் பலியாகியுள்ளதாகவும் அதிர்ச்சி தகவல்கள் வெளிவந்துள்ளன. மேலும் உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு குணமடைந்தோரின் எண்ணிக்கை 4,78,503 ஆக என்பது குறிப்பிடத்தக்கது
 
அமெரிக்காவை அடுத்து ஸ்பெயினில் 1.70 லட்சம் பேர்களும், இத்தாலியில் 1.59 லட்சம் பேர்களும், பிரான்ஸில் 1.36 லட்சம் பேர்களும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் சுமார் 10 ஆயிரம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது