செவ்வாய், 5 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: புதன், 15 ஏப்ரல் 2020 (07:45 IST)

உணவு தண்ணீர் இல்லை! கோவையில் போராட்டம் நடத்தும் மருத்துவர்கள்!

கோவையில் கொரோனாவுக்கு எதிராக சிகிச்சை செய்து வரும் மருத்துவர்களுக்கு உணவு வழங்கப்படுவதில்லை எனக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் இரண்டாவது இடத்தில் உள்ளது கோவை மாவட்டம்.  இந்நிலையில் அங்கு பாதிக்கப்பட்டவர்கள் கோவை அரசு மருத்துவமனை, ஈ எஸ் ஐ மருத்துவமனை உள்ளிட்ட சில தனியார் மருத்துவமனைகளிலும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் அங்கு சிகிச்சை அளித்து வந்த இரு மருத்துவர்களுக்கும் கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் மருத்துவமனையில் உள்ள கேண்டீன் மூடப்பட்டதால் அங்குள்ள முதுகலைப் படிக்கும் பயிற்சி மருத்துவர்களுக்கு உணவு மற்றும் தண்ணீர் கிடைக்கவில்லை. மாணவர்கள், தண்ணீர் மற்றும் உணவு கேட்டு கோவை அரசு மருத்துவமனை டீனுக்கு மனு கொடுத்தனர். இது சம்மந்தமாக சமூகவலைதளங்களில் அந்த கடிதம் பகிரப்பட்டு சுகாதாரத்துறை செயலர் பீலா ராஜேஷை டேக் செய்தனர்.


கோவை கலெக்டருடன் பேசி பிரச்சனையை சரிசெய்துவிட்டேன் எனக் கூறினார். ஆனால் மிகக் குறைவிலான உணவே தங்களுக்கு விநியோகிக்கப்படுவதாக அவர்கள் குற்றம் சாட்டி டீன் அறை முன்பு கை தட்டி போராட்டம் நடத்தியுள்ளனர்.