1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: செவ்வாய், 14 ஏப்ரல் 2020 (19:40 IST)

இன்றைய தேதியில் மாவட்டவாரியாக கொரோனா பாதிப்பு குறித்த தகவல்

தமிழகத்தில் இன்று கொரோனாவுக்கு 31 பேர் மட்டுமே பாதிக்கப்பட்டுள்ளதாக வெளிவந்த செய்தியை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் இந்த 31 பேர்களும் எந்தெந்த மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என்பதை பார்ப்போம்
 
இன்று கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் சென்னையை சேர்ந்தவர்கள் 5 பேர்கள், திண்டுக்கல்லை சேர்ந்தவர்கள் 9 பேர்கள், நாகை மற்றும் மதுரையை சேர்ந்தவர்கள் தலா 2 பேர்கள், கடலூர், சேலம், கன்னியாகுமரி மற்றும் சிவகெங்கை ஆகிய மாவட்டங்களை சேர்ந்தவர்கள் தலா ஒருவர், தஞ்சையை சேர்ந்தவர்கள் 4 பேர்கள், தென்காசியை சேர்ந்தவர்கள் 2 பேர்கள் ஆவர்.
 
இதனையடுத்து தமிழகத்தில் மிக அதிகமாக சென்னையை சேர்ந்தவர்கள் 211 பேர்களும், கோவையை சேர்ந்தவர்கள் 126 பேர்களும், திருப்பூரை சேர்ந்தவர்கள் 79 பேர்களும், திண்டுக்கல்லை சேர்ந்தவர்கள் 65 பேர்களும்,ஈரோட்டை சேர்ந்தவர்கள் 64 பேர்களும் உள்ளனர்.
 
மேலும் நெல்லையில் 56 பேர்களும், செங்கல்பட்டில் 46 பேர்களும், நாமக்கல்லில் 45 பேர்களும், திருச்சியில் 43 பேர்களும், கரூர் மற்றும் மதுரையில் 41 பேர்களும், கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டுள்ளனர். மிக குறைவாக அரியலூர் மற்றும் பெரம்பலூரில் தலா ஒருவர் மட்டுமே கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது