1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: செவ்வாய், 14 ஏப்ரல் 2020 (19:17 IST)

விழுப்புரத்தில் இருந்து தப்பியோடிய கொரோனா நோயாளி பிடிபட்டார்

விழுப்புரத்தில் இருந்து தப்பியோடிய கொரோனா நோயாளி பிடிபட்டார்
விழுப்புரம் அரசு பொது மருத்துவமனையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட டெல்லியைச் சேர்ந்த ஒருவர் தவறுதாலாக டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை எற்படுத்திய நிலையில் தற்போது அவர் பிடிபட்டார்
 
விழுப்புரத்தில் மருத்துவமனை ஊழியர்கள் தவறுதலாக டிஸ்சார்ஜ் ஸ்லிப் கொடுக்கப்பட்டதால், கொரோனா பாதிப்புக்கு உள்ளானவர் மருத்துவமனையில் இருந்து வெளியேறிவிட்டார். இதன்பின் தவறை உணர்ந்த மருத்தவமனை அதிகாரிகள்,  உடனடியாக விழுப்புரம் காவல்துறையிடம் விஷயத்தை கூறி டிஸ்சார்ஜ் செய்தவரை தேடி வந்தனர்.
 
டெல்லியைச் சேர்ந்த அந்த நோயாளியைக் கண்டுபிடிக்க போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வந்த நிலையில் சற்றுமுன் விழுப்புரத்தில் தவறுதலாக விடுவிக்கப்பட்ட கொரோனா நோயாளி சிக்கினார் என்ற தகவல் வெளிவந்துள்ளது. செங்கல்பட்டு மாவட்டம் படாளம் என்ற பகுதியில் அவரை போலீசார் கண்டுபிடித்ததாகவும் இதனையடுத்து அவர் தற்போது மீண்டும் கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது. இந்த ஐந்து நாட்களில் அவர் எங்கெங்கு சென்றார் என்பது குறித்த விசாரணை நடந்து வருகிறது