வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: வியாழன், 26 டிசம்பர் 2024 (09:55 IST)

அமெரிக்காவின் தேசியப்பறவை கழுகு: அதிகாரபூா்வமாக அறிவித்த ஜோ பைடன்.. டிரம்ப் மாற்றுவாரா?

அமெரிக்காவின் தேசிய பறவை கழுகு என தற்போதைய அதிபர் ஜோ பைடன் கையொப்பமிட்டு உறுதி செய்துள்ள நிலையில், அடுத்த மாதம் டிரம்ப் அதிபராக பதவி ஏற்ற உடன் இதை மாற்றுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
 
அமெரிக்காவில் வெண்தலை கழுகு, கடந்த 1782 ஆம் ஆண்டு அமெரிக்க அரசு முத்திரையில் இடம்பெற்று இருந்த நிலையில், அனைத்து அமெரிக்க அரசு ஆவணங்களிலும் இந்த சின்னம் பொறிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், கடந்த 240 ஆண்டுகளுக்கு மேலாக வெண்தலை கழுகு அமெரிக்க அரசின் அதிகார சின்னமாக இருந்து வந்துள்ளது.
 
இந்த கழுகு தான் அமெரிக்காவின் தேசிய பறவை என்று பலரும் கருத்து தெரிவிக்கின்றனர். ஆனால் உண்மையில் இதுவரை அமெரிக்காவின் தேசிய பறவையாக அது அதிகாரபூர்வமாக அரசால் அங்கீகரிக்கப்படவில்லை.
 
இந்த நிலையில், அமெரிக்காவின் தேசிய பறவையாக வெண்தலை கழுகை அறிவிக்கும் மசோதா சமீபத்தில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. அதில், அதிபர் ஜோ பைடன் கையெழுத்திட்டு அதை உறுதி செய்துள்ளார். இருப்பினும் இன்னும் ஒரே மாதத்தில் அவர் பதவி விலக இருக்கும் நிலையில், அடுத்து பதவிக்கு வரும் டிரம்ப் அதை மாற்றுவாரா அல்லது இதே பறவை அமெரிக்க அரசின் தேசிய பறவையாக நீடிக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
 
 
Edited by Mahendran