நேற்று கிறிஸ்துமஸ் விடுமுறைக்கு பின் இன்றைய பங்குச்சந்தை நிலவரம் எப்படி?
நேற்று கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு பங்குச்சந்தைக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில், இன்று பங்குச்சந்தை ஆரம்பத்திலேயே ஏற்றம் கண்டிருப்பது முதலீட்டாளர்களுக்கு நிம்மதியை அளித்துள்ளது.
இந்திய பங்கு சந்தை கடந்த சில நாட்களாக மிக மோசமாக சரிந்த நிலையில், முதலீட்டாளர்கள் பெரும் நஷ்டம் அடைந்து கொண்டிருந்தனர் என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில், இன்று காலை பங்குச்சந்தை வர்த்தகம் தொடங்கிய நிலையில் ஏற்றத்தில் பங்குச்சந்தை உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 285 புள்ளிகள் உயர்ந்து 78 ஆயிரத்து 789 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. அதேபோல், தேசிய பங்குச்சந்தை நிஃப்டி 90 புள்ளிகள் உயர்ந்து 23 ஆயிரத்து 818 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.
இன்றைய பங்குச்சந்தையில் ஆக்சிஸ் வங்கி, பஜாஜ் பைனான்ஸ், பாரதி ஏர்டெல், பிரிட்டானியா, HCL டெக்னாலஜி, HDFC வங்கி, ஹீரோ மோட்டார்ஸ், ஹிந்துஸ்தான் லீவர், ஐடிசி உள்ளிட்ட பங்குகள் உயர்ந்துள்ளன. அதே நேரத்தில், ஆசியன் பெயிண்ட், சிப்லா, நெஸ்லே இந்தியா, TCS, டைட்டான் உள்ளிட்ட பங்குகள் குறைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளன.
Edited by Siva