ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By siva
Last Updated : வெள்ளி, 13 மே 2022 (17:06 IST)

ஐக்கிய அரபு அமீரக அதிபர் கலிஃபா சையத் காலமானார்! உலக தலைவர்கள் இரங்கல்!

UAE president
ஐக்கிய அரபு அமீரக அதிபர் கலிஃபா சையத் காலமானார்! உலக தலைவர்கள் இரங்கல்!
ஐக்கிய அரபு அமீரக அதிபர் திடீரென காலமானதை அடுத்து உலக தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்
 
ஐக்கிய அரபு எமிரேட் அதிபர் ஷேக் கலிபா பின் சையத் என்பவர் உடல் நலக்குறைவு காரணமாக கடந்த சில மாதங்களாக சிகிச்சை எடுத்து வந்தார் 
 
இந்நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் காலமானதாக ஐக்கிய அரபு அமீரகம் அறிவித்துள்ளது. அவருக்கு வயது 73 
 
கடந்த 2004ஆம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் ஐக்கிய அரபு அமீரக அதிபராக இருந்து வரும் ஷேக் கலிபா பின் சையத் மறைவுக்கு உலக தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அவரது இறுதிச்சடங்கு விரைவில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது