செவ்வாய், 31 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: வியாழன், 5 மே 2022 (21:35 IST)

ரஷியா போர் நிறுத்த வேண்டும்- உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி

Volodymyr Zelenskyy
ரஷியா உக்ரைன் போர் கடந்த 70 நாட்களுக்கு மேல் நடந்து வரும்  நிலையில், ரஷ்யா போர் நிறுத்தத்தில் ஈடுபட வேண்டுமென உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.

ரஷ்ய  ராணுவம் உக்ரைன் மீது படையெடுத்து 70 நாட்களுக்கு மேலாக போரிட்டு வருகிறது.

உக்ரைனில் மரியுபோலை ரஷியா கைப்பற்றியுள்ளது.இதையடுத்து, ரஷியா  அஸ்வோஸ்தால் உருக்கு ஆலையைக் குறிவைத்துத் தாக்குதல் நடத்தி வருகிறது.

இந்நிலையில், மரியுபோல் நகரத்தின் மீதான ரஷிய தாக்குதல்களை நிறுத்த வேண்டுமென உக்ரைன் அதிபர் ஜெலன்ஸி தெரிவித்துள்ளார். மேலும், பொதுமக்களை வெளியேற்றும் பொருட்டு ரஷியா போர்   நிறுத்த வேண்டுமென தெரிவித்துள்ளார்.

மேலும், உக்ரைன், ரஷியா இடையேயான  போர் நிறுத்த தான் அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்வதாக பெலாரஸ் அதிபர் தெரிவித்துள்ளார்.