திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: திங்கள், 19 டிசம்பர் 2022 (11:28 IST)

ஆடம்பர காரில் சென்ற பெண் ஐடி ஊழியர்: பள்ளிக்கரணை அருகே விபத்தில் சிக்கி பலி!

it staff
ஆடம்பர காரில் சென்ற பெண் ஐடி ஊழியர்: பள்ளிக்கரணை அருகே விபத்தில் சிக்கி பலி!
சென்னையை சேர்ந்த பெண் ஐடி ஊழியர் ஒருவர் பள்ளிகரணை அருகில் ஆடம்பர காரில் சென்று கொண்டிருந்த போது நிகழ்ந்த விபத்து காரணமாக சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக கூறப்படுகிறது. 
 
கோவை மாவட்டத்தைச் சேர்ந்த கிருத்திகா என்ற 24 வயது கம்ப்யூட்டர் இன்ஜினியர் சென்னையை அடுத்த துரைப்பாக்கம் என்ற பகுதியில் ஐடி நிறுவனத்தில் பணியாற்றி வந்தார்.
 
இவர் ஒரு விடுதியில் தங்கி பணியாற்றிய நிலையில் நேற்று ஞாயிறு விடுமுறை என்பதால் தனது நண்பர்களுடன் சொகுசு காரில் சென்னையை சுற்றி பார்க்க சென்றார். அப்போது அவர் சென்ற கார் பள்ளிக்கரணை அருகே தடுப்பு சுவற்றில் வேகமாக மோதி விபத்துக்குள்ளானது. 
 
இந்த விபத்தில் பின்னால் அமர்ந்திருந்த கிருத்திகா பரிதாபமாக பலியானார். மேலும் இந்த விபத்தில் 4 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது. இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
 
Edited by Mahendran