வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 19 டிசம்பர் 2022 (11:41 IST)

அடித்து தூக்கிய புயல்; நடுக்கடலில் மூழ்கிய போர் கப்பல்! – தாய்லாந்தில் அதிர்ச்சி!

Ship
தாய்லாந்து போர் கப்பல் ஒன்று திடீரென புயலில் சிக்கி கடலில் மூழ்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தாய்லாந்து ராணுவத்திற்கு சொந்தமான போர்க்கப்பல் 106 ராணுவ வீரர்களோடு பயணித்துள்ளது. வழக்கமான ரோந்து பணிகளுக்காக தாய்லாந்து வளைகுடா பகுதியில் சென்ற அந்த கப்பல் திடீரென புயல் காற்றில் சிக்கியது.

இதனால் கட்டுப்பாட்டை இழந்த கப்பலில் மின்சாரம் கட் ஆனது. உடன் கடல்நீரும் கப்பலுக்குள் புக தொடங்கியுள்ளது. கடல்நீரை வெளியேற்ற முயன்றும் பலனளிக்காத நிலையில் அந்த கப்பல் நடுகடலில் மூழ்க தொடங்கியது.

தகவலறிந்து சம்பவ இடம் விரைந்த மீட்பு படையினர் 75 பேரை மீட்டுள்ளனர். 31 வீரர்கள் மாயமான நிலையில் அவர்களை தேடும் பணி தொடர்கிறது. இந்த விபத்து அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Edit By Prasanth.K