வியாழன், 23 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Mahendran
Last Modified: புதன், 14 டிசம்பர் 2022 (18:17 IST)

கார் விபத்தில் சிக்கிய இங்கிலாந்து வீரர் பிளிண்ட் ஆஃப். மருத்துவமனையில் அனுமதி

flint off
கார் விபத்தில் சிக்கிய இங்கிலாந்து வீரர் பிளிண்ட் ஆஃப். மருத்துவமனையில் அனுமதி
இங்கிலாந்து நாட்டின் நட்சத்திர கிரிக்கெட் வீரர் ஆண்ட்ரூ பிளிண்ட் ஆஃப் சென்ற கார் விபத்துக்குள்ளானதை அடுத்து அவர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் அவரது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
 
இங்கிலாந்து நாட்டின் மிகச்சிறந்த கிரிக்கெட் வீரர்களில் ஒருவர் பிளிண்ட் ஆஃப் என்பதும், அவரால் இங்கிலாந்து அணி பல வெற்றிகளை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் லண்டனில் தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சிக்காக நடைபெற்ற படப்பிடிப்பில் பிளிண்ட் ஆஃப் கலந்து கொண்ட நிலையில் திடீரென விபத்துக்குள்ளாகியது.
 
இதனை அடுத்து ஆண்டு காயமடைந்த பிளிண்ட் ஆஃப் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன
 
மருத்துவமனையில் இருந்து வெளி வந்த தகவலின் படி பிளிண்ட் ஆஃப் உயிருக்கு எந்தவித ஆபத்தும் இல்லை என்றும் கூறப்படுகிறது
 
Edited by Mahendran