திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Updated : திங்கள், 12 டிசம்பர் 2022 (17:42 IST)

பஞ்சாபில் போலீஸ்காரர் ஒருவர் மீது மற்றொரு போலீஸ்காரர் துப்பாக்கிச் சூடு

மறைந்த பாடகரின் தந்தையின் பாதுகாவலர்கள் ஒருவர் மீது ஒருவர் துப்பாக்கிச்சூடு நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த மே மாதம் 29 ஆம் தேதி பஞ்சாப் பாடகர் சித்து மூஸ் வாலா மீது ரவுடிகள் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.

இதையடுத்து, அவரது தந்தை பால்கவுர் சிங் மீதும் ரவுடிகர்களிடம் இருந்து மிரட்டல்கள் வருவதாக தகவல் வெளியானது.

எனவே பஞ்சாப் காவல்துறை  பல்கவுர் சிங்கிற்கு  நவ்ஜோத் சிங் மற்றும் குர்விந்தர் சிங் ஆகிய இரு துப்பாக்கி ஏந்திய காவலர்களை பாதகாப்பிற்கு நியமித்தனர்.

நேற்று முன் தினம் பஞ்சாபில் நிகழ்ந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட குர்வினந்தர் சிங்கின் மீது மற்றொரு பாதுகாவலரான நவ்ஜோத் சிங் துப்பாக்கியால் சுட்டார்.

இதைப் பார்த்த அங்கிருந்தவர்கள் குர்வித் சிங்கை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.

இதுகுறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

 
Edited By Sinoj