திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Modified: வெள்ளி, 28 செப்டம்பர் 2018 (19:45 IST)

இந்தோனேஷியாவில் பூகம்பத்திற்கு பின் சுனாமி: பொதுமக்கள் அதிர்ச்சி

இந்தோனேஷியாவில் இன்று மாலை பயங்கர பூகம்பம் ஏற்பட்டதை அடுத்து சற்றுமுன் சுனாமி தாக்கியுள்ளதாகவும் இதனால் அந்த பகுதி மக்கள் பெரும் அதிர்ச்சியில் உள்ளதாகவும் அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன

இந்தோனேஷியாவில் இன்று மாலை ஏற்பட்ட பூகம்பத்தின் அளவு 7.5 ரிக்டர் இருந்ததாக புவியியல் ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதனால் சுனாமி தாக்க அதிக வாய்ப்பு இருப்பதாக எச்சரிக்கை விடப்பட்ட ஒருசில நிமிடங்களில் வடக்கு பாலு என்ற பகுதியில் பயங்கர ஆக்ரோஷத்துடன் சுனாமி தாக்கியது

இந்த சுனாமியால் அந்த பகுதியில் உள்ளவர்கள் அதிர்ச்சியில் வேறு இடங்களுக்கு மாறி வருகின்றனர். இந்த சுனாமியல் பெரும் சேதம் ஏற்பட்டிருக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.