செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Modified: ஞாயிறு, 9 செப்டம்பர் 2018 (10:26 IST)

கட்டுப்பாட்டை இழந்த பேருந்து - பள்ளத்தில் கவிழ்ந்து 21 பேர் பலி

இந்தோனேசியாவில் பேருந்து ஒன்று டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் 21 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
இந்தோனேசியாவின் ஜாவா தீவில் தனியார் நிறுவன ஊழியர்கள் சுற்றுலா பேருந்தில் தங்களது சுற்றுலாவை கழிக்க சென்றுள்ளனர். மலை பிரதேசமிக்க அந்த இடத்தில் ஏராளமான வளைவுகள் இருந்தது. ஒரு வளைவில் பேருந்தின் ஓட்டுநர் பேருந்தை வளைக்க முயற்சித்த போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து 98 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் 21 பேர் பலியாகினர்.
 
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்புத் துறையினர் பலியானவர்களின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்தில் படுகாயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த கோர விபத்து அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.