செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Modified: வியாழன், 6 செப்டம்பர் 2018 (14:48 IST)

ஓட்டலில் இரவு 9 மணிக்கு மேல் பெண்களுக்கு சாப்பாடு கிடையாது - அரசின் அதிரடி ஆணை

இந்தோனேஷியாவில் இரவு 9 மணிக்கு மேல் தனியாக வரும் பெண்களுக்கு சாப்பாடு கிடையாது என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்தோனேசியாவின் அச்சே என்ற மாகாணத்த்தில் சவுதி அரேபியாவில் பெண்களுக்கு விதிக்கப்பட்டிருக்கும் கட்டுப்பாடுகளை போலவே, அங்கும் பெண்களுக்கு பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
 
உறவினரில்லாத ஆண்-பெண் ஒன்றாக அமரக்கூடாது. திருமணமாகாத பெண்கள் மற்ற ஆண்களுடன் சுற்றக் கூடாது என்ற நடைமுறைகள் எல்லாம் ஏற்கனவே அமலில் உள்ளது.
 
இந்நிலையில் தற்பொழுது புதிதாக ஒரு ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனைக்கேட்ட பலர் அதிர்ச்சியில் மூழ்கியுள்ளனர். அது என்னவென்றால் இரவு 9 மணிக்கு மேல் பெண்கள் ஓட்டலுக்கு தனியாக வந்து உணவு கேட்டால் அவர்களுக்கு உணவு வழங்க கூடாது என்பது தான். இதனை மீறுபவர்கள் கடுமையான தண்டிக்கப்படுவார்கள் என்றும் அரசு எச்சரித்துள்ளது.