வியாழன், 18 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Abimukatheesh
Last Updated : செவ்வாய், 22 ஆகஸ்ட் 2017 (11:04 IST)

பாகிஸ்தான் மீது குறி வைக்கும் டிரம்ப்

தீவிரவாத அமைப்புகளின் புகழிடமாக பாகிஸ்தான் திகழ்வதை இனியும் பொறுத்துக் கொள்ள முடியாது என அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.


 

 
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் ஆப்கானிஸ்தான் மற்றும் தெற்கு ஆசிய நாடுகள் தொடர்பான தங்களது கொள்கைகள் குறித்து பேசினார். அதில் அவர் கூறியதாவது:-
 
பாகிஸ்தானுக்கு கோடிக்கணக்கான டாலர்களை அமெரிக்க நிதி உதவியாக அளிக்கிறது. இந்நிலையில் பாகிஸ்தான் தலிபான் உள்ளிட்ட தீவிரவாத அமைப்புகளுக்கு சொற்க பூமியாக திகழ்கிறது. நாம் எதிர்த்து போரிட்டு வரும் தீவிரவாதிகளின் புகலிடமாக உள்ளது பாகிஸ்தான். இதை எங்களால் நீண்ட காலம் பொறுத்துக்கொள்ள முடியாது.
 
பாகிஸ்தான் தற்போதையை நிலை உடனடியாக மாற வேண்டும். ஆப்கானிஸ்தானில் நாங்கள் மேற்கொண்டு வரும் வளர்ச்சி நடவடிக்கையில் கூட்டு சேர்ந்தால் பாகிஸ்தான் அதிக பலன் பெற முடியும் என்றார்.
 
ஈராக்கில் ஐஎஸ் தீவிரவாதிகளிடம் இருந்து நகரங்கள் மீட்கப்பட்டது. இதையடுத்து தற்போது பாகிஸ்தான் நாட்டில் உள்ள தீவிரவாதிகள் மீது குறிவைத்துள்ளது அமெரிக்கா.