செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Updated : வெள்ளி, 18 ஆகஸ்ட் 2017 (19:24 IST)

அதிபர் பதவியை ராஜினாமா செய்யும் டிரம்ப்? வெள்ளை மாளிகையில் பரபரப்பு!!

அமெரிக்க அதிபராக உள்ள டொனால்ட் டிரம்ப் தனது பதவியை விரைவில் ராஜினாமா செய்வார் என அவரது நெருங்கிய நண்பர் டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

\
 
 
இந்த பதிவை ட்விட்டியவர் டிரம்ப்பின் நெருங்கிய நண்பர் டோனி.  டோனி, டிரம்ப் அதிபராகும் முன் எழுதிய The Art of the Deal என்ற புத்தகத்தை எழுத உதவி செய்தவர். டிரம்பை பற்றி முழுமையாக அறிந்தவர் டோனி எனவும் கூறப்படுகிறது.
 
இந்நிலையில், டோனி தனது டிவிட்டர் பக்கத்தில், இன்னும் சில வாரங்களில் டொனால்ட் டிரம்ப் தனது பதவியை ராஜினாமா செய்வார் என தெரிவித்துள்ளார்.
 
இந்த பதிவினால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பதவியேற்று ஒரு ஆண்டு கூட ஆகாத நிலையில் இது அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆனால், இந்த பதிவிற்கு டிரம்ப் எந்த பதிலும் அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.