1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Siva
Last Updated : வியாழன், 26 ஜனவரி 2023 (07:53 IST)

டொனால்டு டிரம்ப் பேஸ்புக், இன்ஸ்டாகிராம் பக்கங்களுக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம்: அதிரடி அறிவிப்பு!

Trump
முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அவர்களின் பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கங்களுக்கு தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது அந்த தடை நீக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. 
 
முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது ட்விட்டர் பக்கத்தில் வெறுப்புணர்வு கொண்ட பதிவுகளை செய்ததாக அதிரடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டது. ட்விட்டர் மட்டுமின்றி பேஸ்புக் இன்ஸ்டாகிராம் பக்கங்களும் முடக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் சமீபத்தில் எலான் மாஸ்க் ட்விட்டர் நிறுவனத்தை வாங்கிய பிறகு எலான் மஸ்க் ட்விட்டர் பக்கம் மீண்டும் இயங்கியது. அதேபோல் தற்போது பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கங்களுக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கப்படுவதாக மெட்டா நிறுவனம் அறிவித்துள்ளது 
 
வன்முறையை தூண்டும் விதமாக பதிவு செய்ததாக கடந்த 2021 ஆம் ஆண்டில் ட்ரம்பின் சமூக வலைதள பக்கங்கள் முடக்கப்பட்ட நிலையில் தற்போது மீண்டும் இயங்கும் நிலைக்கு வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Siva