வியாழன், 29 பிப்ரவரி 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 25 ஜனவரி 2023 (12:20 IST)

இன்ஸ்டாகிராமில் காதல்; தண்டவாளத்தில் தற்கொலை! – பள்ளி மாணவியின் சோக முடிவு!

விழுப்புரத்தில் இன்ஸ்டாகிராம் மூலமாக காதலித்த பள்ளி மாணவி காதலனுடன் ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 17 வயது மாணவி ஒருவர் 12ம் வகுப்பு படித்து வந்துள்ளார். தந்தையை இழந்த அந்த சிறுமிக்கு அவரது தாய்தான் படிப்பில் இருந்து அனைத்து செலவுகளையும் பார்த்து வந்துள்ளார்.

இந்நிலையில் பள்ளி சென்ற மாணவிக்கு கூடலூர் அருகே உள்ள அரியத்தூர் கிராமத்தை சேர்ந்த ஐடிஐ மாணவர் சக்திவேல் என்பவருடன் இன்ஸ்டாகிராம் மூலமாக பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் இந்த பழக்கம் காதலாக மாறிய நிலையில் அவ்வபோது இருவரும் நேராகவும் சந்தித்து வந்துள்ளனர்.


சமீபத்தில் இவர்களது காதல் விவகாரம் இரு வீட்டாருக்கும் தெரிய வந்துள்ளது. இருவரும் வேறு வேறு சமூகம் என்பதாலும், காதல் விவகாரம் வெளியே தெரிந்து விட்டதாலும் இருவரும் தற்கொலை செய்து கொள்ள முடிவெடுத்துள்ளனர். அதற்காக பால்வார்த்துவென்றான் கிராமம் அருகே விழுப்புரம் – காட்பாடி ரயில்வே தண்டவாளத்தில் சென்ற அவர்கள் காட்பாடி நோக்கி சென்ற ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

அடையாளம் தெரியாத அளவு சிதைந்த அவர்களது உடல்களை மீட்ட போலீஸார் அதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். தற்கொலை நடந்த இடத்தில் கிடந்த மாணவியின் பள்ளி பையை கொண்டே அவரை அடையாளம் கண்டுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Edit by Prasanth.K