1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: புதன், 18 ஜனவரி 2023 (14:46 IST)

கீர்த்தி சுரேஷின் புது படத்தில் இணைந்த ரெட்டின்ஸ் கிங்ஸ்லி!

தமிழ் சினிமாவில் கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளில் தொடர்ந்து நடித்து வருபவர் கீர்த்தி சுரேஷ்

ரஜினி, விஜய், சூர்யா, சிவகார்த்திகேயன் உள்ளிட்ட முன்னணி நடிகர்களோடு இணைந்து நடித்துள்ள தன் கதாபாத்திரத்துக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளையும் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். சமீபத்தில் அவர் நடிப்பில் வெளியான சாணிக்காயிதம் திரைப்படம் கவனத்தைப் பெற்றது.

இந்த நிலையில், கீர்த்தி சுரேஷ், அடுத்து சந்துரு இயக்கத்தில் ரியால்டா ரீட்டா என்ற படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்தில் பிரபல நகைச்சுவை நடிகர் ரெட்டின்ஸ் கிங்ஸ்லி இணைந்துள்ளார். இருவரும் படப்பிடிப்புத் தளத்தில் இருக்கும் புகைப்படத்தை கீர்த்தி சுரேஷ் பகிர்ந்துள்ளார்.