1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
  4. The son who shot the father

தந்தையை துப்பாக்கியால் சுட்ட மகன்

The son
தந்தையை மகன் சுட்டுக்கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் 10 ஆம் வகுப்புப் படிக்கும் ஒரு மாணவர் பள்ளித்தேர்வில் மிகக்குறைவான மதிபெண் பெற்றார். இது அவரது பெற்றோருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்நிலையில், அவர் தனது வீட்டில் அருகே உள்ள ஒரு கடையில் நின்று பேசிக் நண்பர்களுடன் கொண்டிருந்ததாகத் தெரிகிறது.

இந்நிலையில், அவரது தந்தை அங்கு வந்தபோது, இந்த மாதிரி கடையில் நின்று பேசிக் கொண்டிருப்பதால்தான் மதிப்பெண் எடுக்கவில்லை எனக் கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த மாணவன் தனது வீட்டிலிருந்த துப்பாக்கியை எடுத்து வீட்டிற்கு வந்த தந்தையை சுட்டார். இதில் படுகாயம் அடைந்த தந்தையை அருகில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.

தப்பியோடியோடிய மாணவனை போலீஸார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.  
About Writer
sinoj
அடுத்த கட்டுரையில்
கேரளாவில் ஆன் லைனில் ஓட்டுப்பதிவு?