திங்கள், 13 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வியாழன், 16 செப்டம்பர் 2021 (15:34 IST)

வலிமை படத்தின் பாடல் செய்த சாதனை… சுமாரா இருந்தாலும் ரசிகர்கள் சும்மா இருக்க மாட்டாங்க!

நாங்க வேற மாரி பாடல் யுடியூபில் 25 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்துள்ளது.

அஜித் நடித்த வலிமை படத்தின் சிங்கிள் பாடலான நாங்க வேற மாதிரி என்ற பாடல் நேற்று இரவு வெளியானது என்பது தெரிந்ததே. இந்த பாடல் மிகப்பெரிய அளவில் அஜித் ரசிகர்களால் இணையதளத்தில் பகிரப்பட்ட நிலையில் ஏராளமானோர் இந்த பாடலை பார்த்து வருகின்றனர்.

இந்த நிலையில் இந்த பாடல்ஒரு சில மணி நேரத்தில் இந்த பாடல் இப்போது 25 மில்லியன் பார்வையாளர்கள் பார்த்துள்ளனர். இதன் மூலம் வலிமை படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது. இத்தனைக்கும் இந்த பாடல் வெளியான போது மிகவும் சுமாராக இருக்கிறது என்று விமர்சனங்கள் எழுந்தன. அந்த பாடலையே அஜித் ரசிகர்கள் இப்படி ஒரு சாதனை படைக்க வைத்துள்ளனர்.