1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. OPS request to cm stalin to release seven tamils

7 பேர் விடுதலை: முதல்வருக்கு ஓபிஎஸ் கோரிக்கை!

பேரறிவாளன்
பேரறிவாளன் உள்ளிட்ட ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிக்கிய 7 பேரை விடுதலை செய்ய திமுக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென முன்னாள் முதல்வரும் எதிர்க்கட்சி துணைத் தலைவருமான ஓ பன்னீர்செல்வம் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளார்
 
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிக்கி கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக பேரறிவாளன் உள்பட 7 பேர் சிறையில் தண்டனை அனுபவித்து வருகின்றனர். அவர்களை விடுதலை செய்ய வேண்டும் என திமுக எதிர்க்கட்சியாக இருந்தபோது குரல் கொடுத்தது. ஆனால் தற்போது ஆளுங்கட்சியாக இருக்கும்போது அது குறித்து எதுவும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் உள்ளது 
 
இந்த நிலையில் ஆளுங்கட்சியாக இருக்கும்போது பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்ய எந்த வித நடவடிக்கையும் எடுத்ததாக அதிமுக, தற்போது 7 பேர் விடுதலை குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென முதல்வருக்கு கடிதம் எழுதி உள்ளது
 
இது குறித்து ஓபிஎஸ் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் பேரறிவாளன் உள்பட 7 பேர் விடுதலை செய்ய முதலமைச்சர் மு க ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தனிப்பட்ட முறையிலும், எம்பிக்கள் மூலமும் மத்திய அரசுக்கு அழுத்தம் அழுத்தம் தர வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்
 
 
About Writer
siva
அடுத்த கட்டுரையில்
தந்தையை துப்பாக்கியால் சுட்ட மகன்