பேஸ்புக் நிறுவனத்துக்கு வந்த சிக்கல்! என்ன செய்வார் மார்க்...?
சமீபகாலமாக கூகுலைப் போன்றே பல்வேறு பிரச்சனைகளை சந்தித்து வருகிறது பேஸ்புக் நிறுவனம். முக்கியமாக பேஸ்புக் பயனாளர்களின் தகவல்கள் திருடப்பட்டதாக எழுந்த புகாரை அடுத்து அதன் நிறுவனர் மார்க் இது குறித்து பதில் கூறியுள்ளார்.
பேஸ்புக் பயனாளர்களின் தகவல்கள் திருடப்பட்டது தொடர்பாகவும், அதில்லாமல் பல பயனாளர்களின் சுய விவரம் மற்றும் புகைப்படங்கள் வெளியானதாகவும் பல்வேறு குற்றச்சாட்டுகள் இந்நிறுவனத்தின் மீது எழுந்தது.
இதனையடுத்து பேஸ்புக் நிறுவனர் மார்க் அமெரிக்க செனெட் சபையின் விசாரணை வளையத்தின் கீழ் கொண்டு வரப்பட்டார்.
பின்னர் நடைபெற்ற விசாரணையில் தகவல் திருடப்பட்டதை எல்லாம் மார்ச் ஒப்புக்கொண்டார்.
இதனைதொடர்ந்து செனெட் உறுப்பினர்கள், அமைச்சர்கள்,பங்குதாரர்கள் போன்றோர் எழுப்பிய கேள்விக்கு மார்க் பொறுமையாக பதில் கூறியுள்ளாதாக தகவல் வெளியாகி உள்ளது.
இது பற்றி மார்க் கூறியதாவது :
பேஸ்புக் பயனாளர்களின் தகவல் தொடர்பான பிர்ச்சனைகளை ஒரே ஆண்டில் தீர்த்துவிட முடியாது. ஆனால் அதற்காக முழுவீச்சில் செயல்பட்டு, பாதுகாப்பு அம்சங்களையும் செயல்படுத்தி வருகிறோம் என தெரிவித்துள்ளார்.