ஃபேஸ்புக் காதலனுக்காக பெற்ற தாயை கொலை செய்த கல்லூரி மாணவி

Last Modified செவ்வாய், 25 டிசம்பர் 2018 (09:20 IST)
ஃபேஸ்புக் மூலம் காதலிப்பது தற்போது உலகம் முழுவதும் ஃபேஷனாகி வருகிறது. ஒருவரை ஒருவர் பார்க்காமலேயே ஃபேஸ்புக் சாட்டிங் மூலம் காதலித்து அதன் பின் திருமணம் செய்து கொள்ளும் போக்கு அதிகரித்து வருகிறது. இதில் ஒருசில திருமணங்கள் சக்ஸஸ் என்றாலும் பெரும்பாலான ஃபேஸ்புக் திருமணங்கள் சர்ச்சையில் முடிவதாக ஆய்வு ஒன்று கூறுகின்றது.

இந்த நிலையில் திருவள்ளூர் அருகே கல்லூரி மாணவி தேவபிரியா என்பவர் ஃபேஸ்புக் மூலம் விவேக் என்பவருடன் நட்பாக பழகினார். நாளடைவில் இந்த நட்பு காதலாக மாறியது. ஆனால் இந்த காதலுக்கு தேவபிரியாவின் தாயார் கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.

இதனையடுத்து ஒரு கட்டத்தில் அறிவழகனுடன் ஓடிப்போய் திருமணம் செய்ய தேவபிரியா முடிவு செய்ததாக கூறப்படுகிறது. இதனை தடுத்த தாயை கடுமையாக தாக்கிவிட்டு அறிவழகனின் நண்பர்களுடன் செல்ல முயன்றார் தேவபிரியா. ஆனால் அக்கம்பக்கத்தினர் தேவபிரியாவையும் அவரது காதலனின் நண்பர்களையும் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.


படுகாயம் அடைந்த தேவபிரியாவின் தாயார் சிகிச்சையின் பலனின்றி மரணம் அடைந்துவிட்டதால் தேவபிரியா கைது செய்யப்பட்டுள்ளார். இதுவரை ஒருமுறை கூட நேரில் பார்த்திராத, முகம் தெரியாத ஃபேஸ்புக் காதலனுக்காக பெற்ற தாயை கொலை செய்தது மட்டுமின்றி இனி அவர் வாழ்க்கையின் பெரும்பகுதி ஜெயிலில் இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது


இதில் மேலும் படிக்கவும் :