வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வெள்ளி, 28 டிசம்பர் 2018 (22:14 IST)

உயிரை பணயம் வைக்க முன்னாள் திமுக எம்.எல்.ஏ தயாரா? நடிகை கஸ்தூரி கேள்வி

திமுக முன்னாள் எம்.எல்.ஏ ராஜ்குமார் சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் இன்று 10 வருட சிறை தண்டனை கிடைத்துள்ளது. இந்த தீர்ப்பு வந்த இன்றேதான் குழந்தைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தால் மரண தண்டனை என்ற சட்டத்திருத்த தகவலும் வந்துள்ளது. இந்த நிலையில் இந்த இரண்டையும் இணைத்து நடிகை கஸ்தூரி தனது ஃபேஸ்புக்கில் ஒரு வித்தியாசமான கருத்தை தெரிவித்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது:

ஒரு குழந்தையை கூட்டாக கற்பழித்து கொலையும் செய்த கிராதர்கர்களுக்கு வெறும் 10 ஆண்டு சிறை, 42000 அபராதம். என்ன சட்டமோ என்ன தர்மமோ.

வறுமையின் காரணமாக கேரளாவிலிருந்து வீட்டு வேலைக்கு வந்த சிறுமியை அப்போதைய பெரம்பலூர் திமுக ராஜ்குமாரும் அவர் சகாக்களும் சேர்ந்து சீரழித்த குற்றத்துக்கு கிட்டத்தட்ட ஏழு ஆண்டுகளுக்கு பிறகு தீர்ப்பு வந்துள்ளது.

இன்று புதிய கடுமையான போஸ்கோ சட்டத்திற்கு ஒப்புதல் கிடைத்துவிட்டது. இதன்படி, குழந்தைகளை பாலியல்கொடுமை செய்பவர்களுக்கு மரணம் கிடைக்கும்.

இந்த புதிய சட்டம் அமுலாக்கப்போகிறது என்பதனால் தான் இத்தனை வருடம் வழக்கில் வாய்தா வாங்கி கொண்டிருந்த முன்னாள் திமுக ராஜ்குமார் முதலானோர் இப்பொழுது அவசரம் அவசரமாக தண்டனையை ஒப்புக்கொண்டிருக்கிறார்கள். உயிரை பணயம் வைத்து மேல் முறையீடு செய்வார்களா? பார்ப்போம். என்று கஸ்தூரி சவாலாக கூறியுள்ளார். கஸ்தூரியின் இந்த பதிவுக்கு பெரும் வரவேற்பு கிடைத்து வருகிறது.