செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. இ‌ந்‌திய ‌சி‌னிமா
Written By VM
Last Updated : செவ்வாய், 25 டிசம்பர் 2018 (13:02 IST)

பிரபல இந்தி நடிகர் அர்ஜூன் ராம்பால் கைதாவாரா?

பாலிவுட்டில் தில் ஹை தும்காரா, அசம்பவ், வாதா, எலான், அலாக், ஓம் சாந்தி ஓம், ராக் ஒன் உள்பட பல படங்களில் நடித்தவர் அர்ஜூன்  ராம்பால். 
அர்ஜுன் ராம்பால்,  மும்பையில் உள்ள ஒரு நிறுவனத்திடம் இருந்து ரூ.1 கோடி கடனாக வாங்கி இருந்தார். அந்த தொகையை 90 நாட்களில் திருப்பி செலுத்தி விடுவதாக காசோலையும் வழங்கி உள்ளார். கடனுக்கு 12 சதவீதம் வட்டி தருவதாகவும் உறுதி அளித்துள்ளார். குறிப்பிட்ட தேதியில் அந்த நிறுவனம் அர்ஜுன் ராம்பால் கொடுத்த காசோலையை வங்கியில் செலுத்தியது.
 
ஆனால் அது பணம் இல்லாமல் திரும்பி வந்து விட்டது. இதைத்தொடர்ந்து அர்ஜுன் ராம்பால் மீது அந்த நிறுவனம் கிரிமினல் வழக்கு  தொடர்ந்துள்ளது. இதில் அர்ஜுன் ராம்பால் கைதாகலாம் என்ற பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.