இதுக்குதான் எங்க அம்மாவ கொன்னேன்: கல்லூரி மாணவி பகீர் வாக்குமூலம்

girl
Last Modified புதன், 26 டிசம்பர் 2018 (10:06 IST)
காதலை ஏற்க மறுத்த தாயை மகள் கொலை செய்தது ஏன் என்பது குறித்து கல்லூரி மாணவி வாக்குமூலம் அளித்துள்ளார்.
திருவள்ளூர் அருகே கல்லூரி மாணவி தேவிபிரியா என்பவர் ஃபேஸ்புக் மூலம் விவேக் என்பவருடன் நட்பாக பழகினார். நாளடைவில் இந்த நட்பு காதலாக மாறியது. ஆனால் இந்த காதலுக்கு தேவபிரியாவின் தாயார் கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.
 
இதனையடுத்து ஒரு கட்டத்தில் விவேக்குடன் ஓடிப்போய் திருமணம் செய்ய தேவபிரியா முடிவு செய்ததாக கூறப்படுகிறது. இதனை தடுத்த தாய் பானுமதியை கடுமையாக தாக்கிவிட்டு அறிவழகனின் நண்பர்களுடன் செல்ல முயன்றார் தேவபிரியா. ஆனால் அக்கம்பக்கத்தினர் தேவபிரியாவையும் அவரது காதலனின் நண்பர்களையும் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.
 
படுகாயம் அடைந்த தேவிபிரியாவின் தாயார் பானுமதி சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்துவிட்டதால் தேவபிரியா கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் போலீஸார் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் அம்பலமாகியுள்ளது. 
arrest
எங்களது காதலை எனது தாய் ஏற்க மறுத்துவிட்டதால் அவரை கொல்ல திட்டமிட்டோம். அதன்படி ஒர் கொள்ளை நாடகத்தை அரங்கேற்றி தாயை கொலை செய்தால் நம் மீது சந்தேகம் வராது என திட்டமிட்டடோம். விவேக்கின் பிளான்படி, தேவிபிரியா வீட்டிற்குள் நுழைந்த விவேக்கின் நண்பர்கள் கொள்ளையடிப்பது போல நாடகமாடினர். அப்போது தேவிப்பிரியாவும், விவேக்கின் நண்பர்களும் சேர்ந்து பானுமதியை கொலை செய்துள்ளனர். 
 
பின்னர் அனைவரும் எஸ்கேப் ஆக நினைத்தபோது ஏரியா மக்களிடம் மாட்டிக்கொண்டனர். இதில் கொடுமை என்னவென்றால் மகளின் காதல் விஷயம் அவரது தந்தைக்கே தெரியாது. இச்சம்பவத்தால் அவரது தந்தை உருகுலைந்து போயுள்ளார்.


இதில் மேலும் படிக்கவும் :