செவ்வாய், 23 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Modified: திங்கள், 23 ஜூலை 2018 (11:11 IST)

நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் தீவிரவாதிகள்

பல்வேறு நாச வேலைகளில் ஈடுபட்ட தீவிரவாதிகள் பாகிஸ்தான் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்கு அமெரிக்கா மற்றும் ஈரான் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
மும்பையில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 179 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதல் சம்பவத்துக்கு ஜமாத் உத்-தவா அமைப்பின் தலைவர் சயீத் மற்றும் லஸ்கர்-இ- தொய்பா அமைப்பு என கண்டுபிடிக்கப்பட்டது. பல்வேறு நாசவேலைகளில் ஈடுபட்ட லஸ்கர்-இ- தொய்பாவுடன் தொடர்பில் இருக்கும் ஹபீஸ் சயீதுக்கு தேர்தலில் போட்டியிட அங்கீகாரம் இல்லை என தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.
 
இதனால் அவர்கள் அல்லா-வு-அக்பர் தெஹ்ரிக் என்ற கட்சி சார்பில் தேர்தலில் போட்டியிடுகின்றனர். தங்களின் வேட்பாளர்களின் பட்டியலையும் அவர்கள் வெளியிட்டுள்ளனர்.
 
இதற்கு அமெரிக்கா, ஈரான் உள்ளிட்ட நாடுகள் கடும் எதிர்ப்புகள் தெரிவித்துள்ளன. தேர்தலில் தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்புடையவர்கள் போட்டியிடுகிறார்கள். அவர்கள் பிரச்சாரத்தில் ஈடுபடும் வேட்பாளர்களை குறிவைத்து தாக்குதல் நடத்துகிறார்கள். இதனைத் தடுக்க அந்த நாட்டின் தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அமெரிக்கா, ஈரான் உள்ளிட்ட நாடுகள் தங்களது அறிக்கையில் தெரிவித்துள்ளது.