ஏன் இந்தியாவால் உலகக் கோப்பை போட்டியில் விளையாட முடியாது? ஹர்பஜன் சிங்

Harbhajan Singh
Last Updated: செவ்வாய், 17 ஜூலை 2018 (13:20 IST)
50 லட்சம் மக்கள் கொண்ட குரேஷியா உலகக் கோப்பை போட்டியில் விளையாடும் போது நாம் ஏன் விளையாட முடியாது என்று இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் கருத்து தெரிவித்துள்ளார்.

 
நேற்று முன்தினம் ஃபிபா உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் குரேஷியா, பிரான்ஸ் அணியிடம் தோல்வி அடைந்தது. இருந்தாலும் குரேஷியா முதல் முறையாக இறுதி போட்டிக்கு முன்னேறி பலரது பாராட்டுகளை பெற்று வருகிறது. 
 
50 லட்சம் மக்கள் தொகை கொண்ட குட்டி நாடான குரேஷியா இறுதி போட்டியில் விளையாடியதை அனைவரும் கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் இதுகுறித்து இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது:-
 
50 லட்சம் மக்கள் தொகை குட்டி நாடான குரேஷியா பைனல் விளையாடுகிறது. ஆனால் 135 கோடி மக்கள் தொகை கொண்ட நாம் இந்து,  முஸ்லிம் என போட்டி போடுகிறோம். சிந்தனையை மாற்றினாலும் நாடு மாறும் என்று ஹர்பஜன் தெரிவித்துள்ளார்.
 
உலகிலே கிரிக்கெட்டுக்கு இந்தியாவில்தான் அதிகளவில் ரசிகர்கள் உள்ளனர் அண்மையில் ஆய்வு ஒன்றில் தெரிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் கிரிக்கெட் வீரரின் கால்பந்து விளையாட்டின் மீதான் அக்கறை சற்று மகிழ்ச்சி அளிக்கிறது.


இதில் மேலும் படிக்கவும் :