ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Updated : திங்கள், 16 ஜூலை 2018 (16:22 IST)

தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன் போட்டி - கோப்பையை தவறவிட்ட பி.வி.சிந்து

தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன் இறுதிப் போட்டியில் பங்குபெற்ற இந்திய வீராங்கனை பி.வி.சிந்து ஜப்பானின் ஒக்குஹாராவிடம் தோல்வியடைந்தார்.
தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன் இறுதிப் போட்டியில் ஜப்பான் வீராங்கனை ஒக்குஹாராவை எதிர்கொண்ட இந்திய வீராங்கனை சிந்து ஆட்டத்தின் தொடக்கத்திலிருந்தே ஒக்குஹாராவின் வேகத்திற்கு தாக்குப்பிடிக்க முடியாமல் திணறினார்.
 
முதல் சுற்றில் 21-15 என்ற கணக்கில் சிந்து தோல்வியை தழுவினார். பின்னர் இரண்டாம் ஆட்டத்தில் 11-9 என்ற நிலையில் முன்னிலை பெற்ற சிந்து தொடர்ந்து அதை தக்க வைக்க முடியவில்லை. பின்பு, 18-18 என்ற சம நிலையை எட்டியது ஆட்டம். அதன் பின் ஒக்குஹாரா தொடர்ந்து மூன்று புள்ளிகளை அதிரடியாக பெற்று, ஆட்டத்தை தன் வசமாக்கினார்.
இதன்மூலம் சிந்து இந்த போட்டியில் தோல்வியை தழுவினார். இதேபோல் சிந்து இந்த வருடத்தில் நடைபெற்ற இந்தியா ஓபன் மற்றும் காமன்வெல்த் இறுதிப் போட்டிகளில் தோல்வியடைந்து தங்கப்பதக்கம் வெல்லும் வாய்பை நழுவவிட்டது குறிப்பிடத்தக்கது.