இந்தியா-இங்கிலாந்து கடைசி ஒருநாள் போட்டி - வெற்றியை தக்க வைக்குமா இந்திய அணி?

ODI
Last Modified செவ்வாய், 17 ஜூலை 2018 (10:25 IST)
இந்தியா-இங்கிலாந்து அணிகள் இடையிலான கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று நடைபெற உள்ளது.
இந்தியா மற்றும் இங்கிலாந்து நாடுகளின் அணிகளுக்கு இடையிலான ஒருநாள் கிரிக்கெட் போட்டி தொடரில் முதல் ஒருநாள் போட்டியில் இந்தியா அபார வெற்றி பெற்ற நிலையில் கடந்த சனிக்கிழமை நடைபெற்ற போட்டியில் இங்கிலாந்திடம் இந்தியா தோல்வியை தழுவியது.
 
இதன்மூலம் இரு அணிகளும் 1-1- என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது. முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணியின் பேட்டிங்கும், பவுலிங்கும் பலமாக இருந்ததால், 8 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்தை ஈஸியாக தோற்கடித்தது.
 
அதற்கு நேர்மாறாக 2 வது ஒரு நாள் போட்டியில் இந்திய அணியின் பேட்டிங்கும் பவுலிங்கும் செம சொதப்பல். அதேவேளையில் இங்கிலாந்து அணி ரூட் அபாரமாக விளையாடி 113 ரன்கள் குவித்தார். மேலும் வில்லே 50 ரன்களும், கேப்டன் மோர்கன் 53 ரன்களும்  குவித்தனர். ஆனால் இந்திய வீரர்கள் ஒருவரும் 50 ரன்களை தாண்டவில்லை.
dhoni
கடைசி ஆட்டத்தில் சந்தித்த தோல்விக்கு பதிலடி கொடுக்க இந்திய வீரர்கள் முனைப்புடன் உள்ளனர் அதே வேளையில் சொந்த மண்ணில் இந்தியாவை வீழ்த்த வேண்டும் என இங்கிலாந்து வீரர்களும் கடுமையாக பிராக்டீஸ் செய்து வருகின்றனர். இந்த மேட்ச் இந்திய நேரப்படி 5 மணிக்கு தொடங்க இருக்கிறது.
 
2011-ம் ஆண்டிலிருந்து இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டி தொடரை இந்திய அணி இழந்தது கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.


இதில் மேலும் படிக்கவும் :