சர்வதேச போட்டியில் முத்திரை பதித்த பாகிஸ்தான் வீரர்

Fakhar Zaman
Last Updated: சனி, 21 ஜூலை 2018 (17:11 IST)
பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரர் பாகர் ஜமான் இரட்டை சதம் விளாசி சர்வதேச போட்டியில் பாகிஸ்தான் அணிக்கு பெரும் சிறப்பை தேடி தந்துள்ளார்.

 
பாகிஸ்தான் - ஜிம்பாப்வே அணிகள் இடையேயான ஒருநாள் போட்டி தொடர் நடைபெற்று வருகிறது. 5 போடிகள் கொண்ட தொடரில் இதுவரை நடந்து முடிந்த 4 போட்டிகள் முடிந்துள்ளன. பாகிஸ்தான் அணி 4 போட்டிகளிலும் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியுள்ளது.
 
இதில் நேற்று நடைபெற்ற 4வது போட்டியில் பாகிஸ்தான் முதல் பேட்டிங் செய்தது. தொடக்க வீரரான பாகர் ஜமான் இரட்டை சதம் விளாசி அசத்தினார். இரட்டை சதம் விளாசிய முதல் பாகிஸ்தான் வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார். 
 
இதற்கு முன் 1997ஆம் ஆண்டு சயீத் அன்வர் இந்திய அணிக்கு எதிராக 194 ரன்கள் அடுத்தது சாதனையாக இருந்தது. அதன்பின் தற்போதுதான் பாகிஸ்தான் அணி வீரரால் அதிகபட்ச ஸ்கோர் மற்றும் முதல் இரட்டை சதம் அடிக்கப்பட்டுள்ளது.


இதில் மேலும் படிக்கவும் :