வியாழன், 14 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 18 ஆகஸ்ட் 2021 (09:38 IST)

நாங்க முன்ன மாறி இல்ல.. மாறிட்டோம்; தாக்குதல் நடத்த மாட்டோம்! – தலீபான்கள் அறிவிப்பு!

ஆப்கானிஸ்தானை தலீபான்கள் கைப்பற்றியுள்ள நிலையில் தங்களால் யாருக்கும் எந்த ஆபத்தும் கிடையாது என தலீபான்கள் அறிவித்துள்ளனர்.

ஆப்கானிஸ்தானில் தலீபான்கள் ஆட்சியை கைப்பற்றியுள்ள நிலையில் பாதுகாப்பு கருத்தி அந்நாட்டில் உள்ள பிறநாட்டு மக்களும், சொந்த நாட்டு மக்களுமே அவசர அவசரமாக ஆப்கனை விட்டு தப்பி சென்று வருகின்றனர்.

இந்நிலையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ள தலீபான் செய்தி தொடர்பாளர் “ஆப்கானிஸ்தானில் சண்டை முடிந்துவிட்டது. இனி காபூலின் இயல்புநிலை திரும்பும். போரின் போது ஏற்பட்ட இழப்புகள் ஒரு விபத்துதான். உள்நோக்கத்துடன் நடத்தியது கிடையாது. தலீபான்கள் அனைவரையும் மன்னித்து விட்டது. பொதுமக்கள், ஆப்கன் ராணுவத்தினர் மற்றும் பிற நாட்டு ராணுவத்திற்கு பணியாற்றியவர்கள் அனைவரையும் மன்னித்து விட்டோம். எப்போதும் போல அவர்கள் ஆப்கானிஸ்தானில் வாழலாம். அவர்களது வீடுகளை சோதனை செய்ய மாட்டோம்” என தெரிவித்துள்ளார்.