வியாழன், 23 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. நட்சத்திர பேட்டி
Written By siva

தாலிபான் அமைப்பில் மலையாளிகளா? சசிதரூர் எம்பி டுவிட்டால் பரபரப்பு!

ஆப்கானிஸ்தான் நாட்டை முழுவதுமாக தாலிபான்கள் கைப்பற்றி விட்டனர் என்பதும் தற்போது ஆப்கானிஸ்தான் முழுவதுமே தலிபான்கள் கட்டுப்பாட்டில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
மேலும் ஆப்கானிஸ்தானில் தாலிபான் தலைமையில் புதிய அரசு அமைய உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தாலிபான் அமைப்பின் மலையாளிகள் இருக்கின்றார்களா என்ற சந்தேகத்தை காங்கிரஸ் எம்பி சசிதரூர் எழுப்பியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
தாலிபான் குறித்த வீடியோ ஒன்றை குறிப்பிட்ட சசிதரூரின் தனது டுவிட்டரில் பதிவு செய்து அதில் ஒருவர் மலையாளம் பேசுவதாகவும் இன்னொருவர் அந்த மொழியை புரிந்து கொள்வதாகவும் கூறியதோடு தாலிபான்கள் அமைப்பில் மலையாளிகள் இருக்க வாய்ப்புள்ளதாக டுவிட்டரில் தெரிவித்துள்ளார் 
 
இதற்கு பதிலளித்துள்ள ஒருவர் தாலிபான் அமைப்பின் மலையாளிகள் யாரும் கிடையாது என்றும் அவர்கள் பேசிக்கொள்வது பிராஹ்மி என்ற மொழி என்றும் அதுவும் தமிழ் மலையாளம் போன்ற ஒரு மொழி தான் என்றும் அவர் கூறியுள்ளார். இந்த விளக்கத்தை அடுத்து இதை கண்டுபிடிக்க மொழியியல் ஆய்வாளர்கள் இடம் விட்டு விடுகிறேன் என்று சசி தரூர் மீண்டும் தெரிவித்துள்ளார். சசிதரூரின் இந்த சர்ச்சை கருத்து மலையாளிகள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது