செவ்வாய், 21 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: புதன், 18 ஆகஸ்ட் 2021 (08:03 IST)

பேஸ்புக்-ஐ தொடர்ந்து வாட்ஸ் ஆப்: தாலிபான்களுக்கு தடை!

தலிபான்கள் மற்றும் அவர்களது ஆதரவாளர்களின் வாட்ஸ் ஆப் கணக்கும் முடக்கப்படுவதாக பேஸ்புக் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 

 
ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்க படைகள் விலகி கொண்ட நிலையில் தலீபான்கள் மொத்த ஆப்கானிஸ்தானையும் கைப்பற்றியுள்ளனர். இதனால் மற்ற நாட்டவர் உயிருக்கு ஆபத்து என்பதை தாண்டி ஆப்கானிஸ்தானிலேயே வசித்த தலீபான் எதிர்ப்பாளர்களுக்கும் உயிர் ஆபத்து ஏற்பட்டுள்ளது.
 
இந்நிலையில் தலீபான்களின் பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு எதிராக கருத்து தெரிவித்துள்ள பேஸ்புக் பயங்கரவாதத்திற்கு இடமளிக்காத வகையில் தலீபான்கள் மற்றும் அவர்களுக்கு ஆதரவாக பதிவிடுவோர் கணக்குகளை முடக்க உள்ளதாக தெரிவித்தது அதன்படி அதை செய்தது. 
 
இதனைத்தொடர்ந்து தற்போது தலிபான்கள் மற்றும் அவர்களது ஆதரவாளர்களின் வாட்ஸ் ஆப் கணக்கும் முடக்கப்படுவதாக பேஸ்புக் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஆம், ஏற்கனவே பேஸ்புக் கணக்கு முடக்கப்பட்ட நிலையில் தற்போது வாட்ஸ் ஆப் கணக்கும் முடக்கப்பட்டுள்ளது.