திங்கள், 4 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 17 ஆகஸ்ட் 2021 (21:13 IST)

தாலிபான்கள் ஆதரவுடன் அதிபராக முயற்சிக்கும் துணை அதிபர்!

ஆப்கன் நாடு கடந்த சில நாட்களுக்கு முன்னர் தாலிபான்கள் கட்டுப்பாட்டுக்கு வந்த நிலையில் அந்நாட்டின் அதிபர் அஸ்ரப் கானி திடீரென தலைமறைவானார். அவர் ஓமன் நாட்டில் கோடிக்கணக்கான பணத்துடன் இருப்பதாக கூறப்படுகிறது 
 
இந்த நிலையில் அந்நாட்டின் துணை அதிபர் அம்ருல்லா சாலே என்பவர் தனது டுவிட்டர் பக்கத்தில் ஆப்கானிஸ்தான் நாட்டிற்கு சட்டப்படி நான்தான் அதிபர் என டுவிட் ஒன்றை பதிவு செய்துள்ளார் 
 
ஆப்கானிஸ்தான் அதிபர் தற்போது தலைமறைவாக இருக்கும் நிலையில் நான்தான் சட்டப்படி துணை அதனை சட்டப்படி அதிபர் என்றும் அம்ருல்லா சாலே தெரிவித்துள்ளார். தாலிபான் தலைவர்கள் உட்பட அனைத்து தலைவர்களும் சந்தித்து அவர்களது ஒருமித்த கருத்தையும் ஆதரவையும் பெற திட்டமிட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார். ஆப்கானிஸ்தான் துணை அதிபர் அந்நாட்டின் அதிபராக தாலிபான்கள் ஆதரவு தருவார்களா? என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.