1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
  4. Talibans new regulations for universities

ஆண்கள், பெண்கள் ஒன்றாக படிக்கக் கூடாது! – தாலிபான்கள் புதிய உத்தரவு!

Afghanistan
ஆப்கானிஸ்தானை தாலிபான்கள் கைப்பற்றியுள்ள நிலையில் பெண்கள், ஆண்கள் ஒன்றாக படிக்க தடை விதித்துள்ளனர்.

ஆப்கானிஸ்தானை தாலிபான்கள் கைப்பற்றியுள்ள நிலையில் உள்நாட்டு, வெளிநாட்டு மக்கள் பலரும் ஆப்கனை விட்டு வேகமாக வெளியேறி வருகின்றனர். இந்நிலையில் தொடர் குண்டு வெடிப்பு சம்பவங்கள் ஆப்கனில் பதற்றத்தை ஏற்படுத்தி வருகிறது.

இந்நிலையில் ஆப்கனை பிடித்துள்ள தாலிபான்கள் பெண்கள் மீது அடக்குமுறையை ஏவுவார்கள் என பலரும் கூறி வருகின்றனர். தற்போது பல்கலைகழகங்கள், கல்லூரிகளில் பெண்கள், ஆண்கள் ஒன்றாக படிக்கக்கூடாது என தனித்தனி வகுப்பறைகளில் பாடம் நடத்த தாலிபான்கள் உத்தரவிட்டுள்ளனர். தொடர்ந்து பெண்களின் உடை கலாச்சாரம் உள்ளிட்டவற்றிலும் தாலிபான்கள் தலையிட கூடும் என கூறப்படுகிறது.
About Writer
Prasanth Karthick
அடுத்த கட்டுரையில்
தடுப்பூசி போட்டுக்கொள்ள கல்லூரி மாணவர்கள் ஆர்வம்