1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Today gold and silver rate at chennai

தங்கம் விலை மீண்டும் சரிவு: கிராம் ஒன்றுக்கு ரூ.19 குறைந்தது!

தங்கம்
கடந்த சில நாட்களாக சர்வதேச சந்தையில் நிலவரத்திற்கு ஏற்ப சென்னையில் தங்கம் விலை ஏற்ற இறக்கத்துடன் இருந்தது என்பதும் குறிப்பாக கடந்த இரண்டு நாட்களில் தங்கம் விலை உச்சத்திற்கு சென்றது என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் இன்று தங்கம் விலை கிராம் ஒன்றுக்கு 19 ரூபாய் குறைந்துள்ளது. இன்றைய தங்கம் வெள்ளி நிலவரம் குறித்து தற்போது பார்ப்போம்
 
சென்னையில் இன்று ஒரே நாளில் 19 ரூபாய் குறைந்து  ரூபாய் 4488.00 எனவும், இன்று ஒரே நாளில் சவரன் ஒன்றுக்கு ரூ.152 குறைந்து ரூபாய் 35904.00என விற்பனையாகி வருகிறது. சென்னையில் இன்று 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 4852.00 எனவும் ஒரு சவரன் ரூபாய் 38816.00 எனவும் விற்பனையாகிறது. 
 
சென்னையில் இன்று கிராம் ஒன்றுக்கு 30 காசுகள் குறைந்து ஒரு கிராம் ரூபாய் 68.40 எனவும், ஒரு கிலோ விலை ரூபாய் 68400.00 எனவும் விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
 
அடுத்த கட்டுரையில்
அமெரிக்கா புறப்பட்டார் விஜயகாந்த்!