150 வருஷத்துக்கு பின் வரும் சூப்பர் எல் நினோ!.. அலார்ட்டா இருங்க!..
தற்போது கோடை காலம் என்பதால் இந்தியா முழுவதும் கடும் வெயில் நிலவி வருகிறது. அதுவும் மே மாதம் முதல் வாரத்தில் கத்திரி வெயில் துவங்குகிறது. அப்போது வெயிலின் தாக்கம் இன்னமும் அதிகரிக்கும். இப்போதே காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை வெளியே வர முடியவில்லை. வெயில் காரணமாக சாலைகளில் செல்லும் வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகிறார்கள்.
இந்நிலையில்தான் சூப்பர் எல் நினோ நிலம் ஒன்று வருகிற அக்டோபர் மாதம் உருவாகவுள்ளதாக தனியார் வானிலை ஆய்வாளர் ஹேமச்சந்தர் எச்சரிக்கை செய்திருக்கிறார். பசிபிக் பெருங்கடலின் மத்திய மற்றும் கிழக்கு பகுதியில் கடல் நீர் வெப்பநிலை வழக்கத்தை விட >2 டிகிரி செல்சியஸ் அதிகரிப்பதே இந்த அரிதான நிகழ்வு ஆகும்.
1876 ம் வருடத்திற்கு பின் வலுவான சூப்பர் எல் நினோ வருகிற அக்டோபர் மாதம் உருவாகும் எனவும் அதன் காரணமாக 2027 ஆம் வருடம் உலகின் சராசரி வெப்பநிலை 1.65 டிகிரி செல்சியஸ் அதிகரிப்பதுடன் அதீத வெப்பம் அலைகள், வறட்சி, பெருமழை நிகழ்வுகளை 2027ம் வருடம் உலகம் எதிர்கொள்ள நேரிடும் எனவும் அவர் எச்சரிக்கை செய்திருக்கிறார்.
இதன் காரணமாக பல மாநிலங்களில் கடுமையான வறட்சி நிலவும் எனவும், இந்தியா முழுவதும் பல மாநிலங்களில் அதிக வெப்பநிலை நிலவும் எனவும், நிலத்தடி நீர் மட்டம் குறைதல் மற்றும் நீர் நிலைகளில் நீர் இழப்பு குறைதல் போன்ற பிரச்சினைகளை சந்திக்க நேரிடும் எனவும் அவர் எச்சரித்திருக்கிறார்.