புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Updated : சனி, 3 ஆகஸ்ட் 2019 (15:35 IST)

இந்தோனேஷியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் குடியிருப்புகள் சேதம்..

இந்தோனேஷியாவின் சுமத்ரா தீவில், சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதை அடுத்து பல வீடுகள் சேதமடைந்துள்ளன.

இந்தோனேஷியாவின் நேற்று இரவு  சுமத்ரா மற்றும் ஜாவா தீவுகளில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோளில் 6.9 ஆக பதிவாகியுள்ளது.

இந்தோனேஷியாவின் லபுவானிலிருந்து 150 கி.மீ. தூரத்தில், 42 கி.மீ. ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலநடுக்கத்தால் அச்சமடைந்த அப்பகுதி மக்கள் வீடுகளை விட்டு சாலைகளுக்கு ஓட்டம் பிடித்தனர். 

இந்த நிலநடுக்கத்தால் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வீடுகளை இழந்துள்ளனர் என்றும், 100 க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் சேதமடைந்துள்ளன எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் இந்த நிலநடுக்கத்தால் 49 வயது மதிக்கத்தக்க பெண்மணி ஒருவர் அதிர்ச்சியில் மாரடைப்பால் இறந்துள்ளார் எனவும் கூறப்படுகிறது.