இந்தோனேஷியாவில் வெடித்து சிதறிய எரிமலை: பதற வைக்கும் வீடியோ

valcano
Last Updated: சனி, 27 ஜூலை 2019 (19:01 IST)
இந்தோனேஷ்யாவில் எந்த வித முன் அறிகுறிகளும் இல்லாமல் திடீரென வெடித்த எரிமலையின் வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாக பரவி வருகின்றன.

உலகில் எரிமலை தீவு என்றழைக்கப்படும் இந்தோனேஷியாவின் மேற்கு ஜாவா பகுதியில் உள்ள டங்குபான் பெராஹு எரிமலை நேற்று திடீரென வெடித்தது. எரிமலையிலிருந்து சாம்பலும், கற்களுமாக சாலைகளில் வீசியெறியப்பட்டன. அது சுற்றுலா தளம் என்பதால் அங்கு வந்திருந்த சுற்றுலா பயணிகள் நாலா புறமும் தெறித்து ஓடினர்.

200 மீட்டர் உயரத்துக்கு எழுந்த சாம்பல் புகை மண்டலம் மொத்த ஊரையுமே சாம்பல் மயமாக்கியது. உடனடியாக சுற்றுலா பயணிகள் மற்றும் மக்கள் அந்த பகுதிகளிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.

சாம்பல் புகையை எரிமலை கக்கும் காட்சிகளையும், சாலை முழுவதும் சாம்பல்மயமாக கிடக்கும் காட்சிகளையும் வீடியோ எடுத்தவர்கள் ட்விட்டரில் பகிர்ந்துள்ளனர்.


இதில் மேலும் படிக்கவும் :