1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Updated : சனி, 27 ஜூலை 2019 (14:40 IST)

வீட்டிற்கு வந்தது வேற்றுகிரக வாசியா?? இணையத்தில் பரவும் அபூர்வ ஜந்து…

இந்தோனேஷியாவில் வீட்டிற்கு வந்த அபூர்வ ஜந்துவை வேற்றுகிரகவாசியா என சந்தேகித்துள்ளார் அந்த வீட்டின் உரிமையாளர்.

இந்தோனேஷியாவில் பாலி பகுதியில் வசித்து வருபவர் ஹேரி டோ. சமீபத்தில் இவரது வீட்டின் சுவரில், ஒரு அபூர்வ பூச்சியைக் கண்டுள்ளார். அந்த பூச்சிக்கு நான்கு கால்கள் இருந்துள்ளன.

இதற்கு முன் இப்படியொறு பூச்சியை தன் வாழ்நாளில் பார்த்திராத ஹேரி டோ, இது வேற்றுகிரகத்தைச் சேர்ந்த ஜந்துவாக இருக்குமோ என சந்தேகித்துள்ளார். அதன் பின்பு இந்த உயிரினம் ஆர்ட்டைனா என்ற பூச்சிக்குடும்பத்தைச் சேர்ந்தது என தெரியவந்தது. இந்த வகை பூச்சிகள், தென்கிழக்கு ஆசியா மற்றும் ஆஸ்திரேலியாவில் பரவலாக காணப்படும் எனவும் ஹேரி டோவுக்கு தெரிய வந்தது. அதன் பின்பு அந்த பூச்சியை வீடியோ எடுத்து இணையத்தில் பகிர்ந்துள்ளார். தற்போது இந்த விடியோ வைரலாக பரவி வருகிறது.