புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Modified: திங்கள், 29 ஜூலை 2019 (16:20 IST)

குரங்கை விழுங்கிய ராட்சத பல்லி (டிராகன்) வைரல் வீடியோ!!

இந்தோனேஷியாவில் தூங்கிக்கொண்டிருந்த குரங்கை 10 அடி நீளமுள்ள பல்லி ஒன்று விழுங்கிய வீடியோவாக பரவி வருகிறது. 
 
ரம்பத்தை போன்ற கூர்மையான பற்களை உடைய விஷத்தன்மை மிக்க கொமோடா டிராகன்கள் (ராட்சதப் பல்லியினம்) உலகிலேயே இந்தோனேஷியக் காடுகளில் மட்டுமே வசிக்கின்றன. 
 
10 அடி நீளமுள்ள கொமோடா டிராகன் ஒன்று மரத்தின் அடியில் உறங்கிக் கொண்டிருந்த அனுமன் மந்தி என்ற குரங்கை பிடித்தது. பின்னர் அந்த குரங்கை அப்படியே முழுமையாக விழுங்கியது. இது குறித்த வீடியோ ஒன்றும் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. 
 
கொமொடா டிராகன் வசிக்கும் தீவிற்கு சுற்றுலா பயணிகள் அதிகளவில் குவிவதால் அந்தத் தீவின் சூழலியல் கெடுகிறது, அதனால் அந்த கொமோடா டிராகன்கள் வசிக்கும் கொமோடா தீவை அந்த டிராகன்களிடமே விட்டுவிடத் திட்டமிட்டுள்ளது இந்தோனேஷியா அரசு.